முதல் டி20 போட்டி: பர்ஹான் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஆட்ட நாயகன் விருது சாகிப்சதா பர்ஹானுக்கு அளிக்கப்பட்டது.
farhan, mass
Published on: 
Summary

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

லஹிரு உதாரா அபாரம்

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உதாரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 55 பந்தில் 91 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரை அடுத்து அதிகபட்சமாக உதிரி வகையில் 29 ரன்கள் கிடைத்தது.

பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், இம்ரான் ரந்தாவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பர்ஹான் அதிரடி

இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான சாகிப்சதா பர்ஹான் அதிரடியாக ஆடி 53 பந்தில் 89 ரன் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

மாஸ் சதாகத் அரை சதம் கடந்து அவுட்டானார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆட்ட நாயகன் விருது சாகிப்சதா பர்ஹானுக்கு அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com