

பாகிஸ்தான்- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் தய்யப் ஆரிஃப் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அசான் அவைஸ் 50 பந்துகளில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதற்கிடையே முகமது தாஹா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சல்மான் ஆகா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு சவுத் ஷகீல் உடன் காஜி கோரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
பாகிஸ்தான் 67.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்திருக்கும்போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்ட நிறுத்தப்பட்டது. அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஷகீல் 57 ரன்களுடனும், கோரி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சவுத் ஷகீல் சதத்தை நோக்கி சென்றார். கோரி அரைசதம் நோக்கி சென்றார். ஆனால் கோரில் 48 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷகீல் 93 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
அரபாத் மின்ஹாஸ் 72 பந்தில் 52 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 434 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.