

பாகிஸ்தான்- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ராவல் பிண்டியில் நாளை தொடங்குகிறது. இலங்கையைச் சேர்ந்த பேட்ஸ்மேன் குசல் மென்டிஸ் முதன்முறையாக டெஸ்ட் அணி கேப்டனாக களம் இறங்குகிறார்.
சமீப காலமாக பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிக்கு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. நாளை நடைபெறும் போட்டிக்கு க்ரீன் பிட்ச் தயார் செய்திருப்பதாக தெரிகிறது.
க்ரீன் பிட்சியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குசல் மென்டிஸ் கூறியதாவது:-
எங்களது அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் எந்தவிதமான ஆடுகளத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் பச்சை நிற ஆடுகளம் அமைக்கப்படலாம் என்றும், அது வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவதற்கான திறமை எங்கள் வீரர்களுக்கு உள்ளது. நாங்கள் ஏற்கனவே இதுபோன்று இங்கிலாந்தில் க்ரீன் பிட்சியில் விளையாடியிருக்கிறோம்.
திமுத் சந்திமால், தனஞ்செய டி சில்வா உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருப்பது கூடுதல் பலம். டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும், இந்தப் போட்டிகளில் விளையாடுவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது.
வேகப்பந்து வீச்சாளர்களான அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா மற்றும் தில்ஷான் மதுஷங்கா ஆகியோர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.