பாகிஸ்தான் அணி ஏற்கனவே பல ரசிகர்களை இழந்துவிட்டது: வீரர்களுக்கு ரமீஸ் ராஜா எச்சரிக்கை..!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
ரமீஸ் ராஜா
ரமீஸ் ராஜா
Published on
Summary

மோசமான ஆட்டத்திறன் காரணமாக பாகிஸ்தான் அணி தனது ரசிகர் பட்டாளத்தை இழந்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா எச்சரித்துள்ளார். மேலும், தங்கள் தீவிர ஆதரவாளர்கள் கொண்டாடும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு வீரர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து தொடர்

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், நாளை 2-வது போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறியதாவது:-

பாகிஸ்தான் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அவர்கள் வீரர்களிடம் இருந்து ஒரு போராட்ட குணம், நேர்மறையான உடல்மொழி மற்றும் போட்டியிடும் மனப்பான்மை ஆகியவற்றை எதிர்பார்க்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சிக்கின்றன. அவர்கள் ஏற்கனவே பல ரசிகர்களை இழந்துவிட்டனர். எனவே, ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்பது என்பது வெறும் மற்றொரு தோல்வியாக மட்டுமல்லாமல், மேலும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ரசிகர்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகிச் செல்வதற்கும் காரணமாகிவிடுகிறது.

ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான காரணங்களை பாகிஸ்தான் அணி வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் இழக்கத் தொடங்கும்போது, ​​ஒரு அணியின் முக்கியத் தூண் சரிந்து விடுவதாகவே நான் எப்போதும் கருதுகிறேன். ஒரு சிறந்த அணியாக உருவெடுக்க ரசிகர்களின் ஆதரவு அவசியம். அதேபோல ரசிகர்களுக்கும் அணியின் ஆதரவு தேவை

எந்தவொரு அணியும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை, எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் முக்கியமானது அந்தப் போராட்ட குணம், களத்தில் உங்கள் இருப்பு மற்றும் உடல்மொழி ஆகியவைதான்.

இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

முந்தைய பாகிஸ்தான் சுற்றுப் பயணங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய தொடரில் ஆட்டோகிராப் (autograph) கேட்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் வாசன் மற்றும் குக் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com