ஒருநாள் டெஸ்ட்: 3வது போட்டியிலும் நமீபியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஒருநாள் டெஸ்ட்
ஒருநாள் டெஸ்ட்
Published on
Summary

நமீபியாவை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்கா முழுமையாக கைப்பற்றியுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நமீபியா தலைநகர் விந்தோக்கில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. .

நமீபியா பேட்டிங்

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நமீபியா, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக செனி கிரீன் 33 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க கேப்டன் பிஜொன் பொர்டியூன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்கா ஆட்டம்

இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

21.3 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா 157 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் நமீபியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.

தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஜோர்டன் ஹெர்மன் அதிகபட்சமாக 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா முழுமையாக கைப்பற்றியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com