பாராட்டியதற்கு கிண்டலா? - பதிலடியில் அதிரடி காட்டிய சேவாக்

பாகிஸ்தானுக்கு இலக்காக 402 ரன்கள் நியூசிலாந்து நிர்ணயித்ததுஅசராத சேவாக் தனது பதிலில் 2 காரணங்களுக்கு நன்றி கூறுங்கள் என்றார்
பாராட்டியதற்கு கிண்டலா? - பதிலடியில் அதிரடி காட்டிய சேவாக்
Published on

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே பெங்களூரூவில் நேற்று போட்டி நடைபெற்றது.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.

பிறகு பாகிஸ்தான் ஆடிய போது மழையின் காரணமாக டக்வர்த்-லூயிஸ்-ஸ்டர்ன் (Duckworth-Lewis-Stern) முறைப்படி இலக்குகள் மாற்றப்பட்டது. அப்போது புதிய இலக்கை அடைய ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை விளாசி பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தானின் தொடக்க வீரர் ஃபகர் ஜமானின் திறமையை பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்தனர்.

இந்தியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும் சாதனையாளருமான வீரேந்தர் சேவாக், தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் ஜமானின் ஆட்டத்தை பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் "ஜமான் பேட்டிங்கில் 'ஜஜ்பே' (வெல்லும் வெறி) குறையவே இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.

"ஜஸ்பே" என்பதை "ஜஜ்பே" என சேவாக் குறிப்பிட்டுள்ளதாக கூறிய ஒரு பாகிஸ்தானியர் "நாங்கள் ஜின்னாவிற்கு நன்றி சொல்ல 'ஜஸ்பே' ஒரு 13-ஆவது காரணமாகும்" என பதிலளித்தார்.

இதன் மூலம் மறைமுகமாக சேவாக்கை கிண்டல் செய்து விட்டதாகவும், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான ஜின்னாவிற்கு நன்றி தெரிவித்ததாகவும் அந்த பாகிஸ்தானியர் கருதினார்.

ஆனால், '13 முறை நன்றி' பதிலுக்கு அசராத சேவாக், "தொடர்ந்து கடனிலேயே வாழ்வதற்கு முதல் நன்றியா? இந்தியாவிடம் 8-0 என தோற்று கொண்டே இருப்பதற்கு இரண்டாவது நன்றியா?" என கேள்வி எழுப்பினார்.

இதுவரை ஐசிசி ஆண்கள் உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 8 முறை தோற்ற பாகிஸ்தான் ஒரு முறை கூட வென்றது கிடையாது. அதே போல் சில வருடங்களாக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், பல நிதி அமைப்புகளிடம் கடன் பெறுவதும் தொடர்கதையாகி விட்டது.

இரண்டையும் குறிப்பிட்டு தனது நடுநிலையான பாராட்டை கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சேவாக்கின் பதிலை சமூக வலைதளங்களில் பலரும் "சேவாக்கின் அதிரடி" என பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com