அரசியலில் களமிறங்குவது குறித்து டோனி பரிசீலனை செய்ய வேண்டும்- ஆனந்த் மகிந்திரா வேண்டுகோள்

டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன்.
அரசியலில் களமிறங்குவது குறித்து டோனி பரிசீலனை செய்ய வேண்டும்- ஆனந்த் மகிந்திரா வேண்டுகோள்
Published on

குஜராத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியையும் அதன் கேப்டன் டோனியையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு அடுத்த சீசனிலும் விளையாடுவது குறித்து டோனி கூறியதாவது, மிகவும் உணர்வுப்பூவமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.

இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் டோனியின் முடிவு குறித்து டுவிட் செய்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன். ஆடுகளத்தில் எவ்வளவு தீவிரமாக செயலாற்றுகிறாரோ, அதே அளவுக்கு அவரிடம் அறிவார்ந்த சிந்தனையும் உள்ளது என உணர்ந்தேன். புதுமையான விஷங்களை செய்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். நிச்சயம் டோனி வருங்காலத்தில் ஒரு தலைவராக திகழ்வார்.

டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com