NZvsSA | 3-வது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு 137 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
NZvsSA | 3-வது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு 137 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
Published on

நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் 2 போட்டிகளில் இருவரும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் மொகோனா 26 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணியில் 2 பேர் மட்டுமே 20 ரன்களுக்கு கூடுதலாக ரன்களை குவித்தனர்.

நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன், மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com