இங்கிலாந்துக்கு எதிராக சதத்தை தவறவிட்ட வில்லியம்சன்- முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 319/8

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 93 ரன்னில் அவுட் ஆனார். இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இங்கிலாந்துக்கு எதிராக சதத்தை தவறவிட்ட வில்லியம்சன்- முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 319/8
Published on

கிறிஸ்ட்சர்ச்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே 2 ரன்னும், கேப்டன் டாம் லாதம் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 34 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய முன்னாள் கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்களை கடந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 93 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த டேரில் மிட்செல் 19, டாம் பிளெண்டல் 17, நாதன் ஸ்மித் 3, மேட் ஹென்றி 18 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து பிலிப்ஸ் - டிம் சவுதி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

இதனால் முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்தது. பிலிப்ஸ் 41 ரன்களுடனும் சவுதி 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com