இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்: முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி யாருக்கு?

முதல் ஒருநாள் போட்டியில் ரோகித், கோலி இந்திய அணிக்கு திரும்புகின்றனர்.
Rohit and Kohli
Published on: 

பரபரப்பான டி20 தொடருக்கு பிறகு, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போது ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் இன்று (நவ.4) நடைபெறுகிறது.

டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும்.

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார்; கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார்.

ரோ-கோ என்ட்ரி:

வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், ஒருநாள் தொடர் முடிந்ததும் சுப்மன் கில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க உள்ளார்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய ஜாம்பவான் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது, அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் முக்கிய அம்சமாக இருக்கும்.

யார் வெற்றி பெறுவார்கள்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை நேருக்கு நேர் ஒருநாள் போட்டிகளில் 123 முறை எதிர்கொண்டு விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 63 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி 52 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எட்டு போட்டிகளுக்கு முடிவில்லை.

நியூசிலாந்து தனது கடைசி பத்து ஒருநாள் போட்டிகளில் ஏழிலும், இந்திய அணி ஐந்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் கோலி 854 ரன்களும், கில் 657 ரன்களும், ரோகித் 607 ரன்களும் எடுத்துள்ளனர்.

X