5 சிக்சர்களுக்காக அல்ல, ரசிகர்கள் என்னை இதற்காக அறிந்து கொள்ள வேண்டும்: ரிங்கு சிங்கின் விருப்பம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ரிங்கு சிங் பிரபலம் ஆனார்.
ரிங்கு சிங்
ரிங்கு சிங்
Published on

இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வீரராக ரிங்கு சிங் உள்ளார். இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செயல்பட முயற்சி செய்கிறார். இவர் இந்த வருடம் தொடக்கத்தில் டி20 உலக கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம் பிடித்திருந்தார்.

ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து 5 சிக்ஸ் விளாசிய ரிங்கு சிங்

2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்சர்கள் விளாசினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக இந்த சாதனையைப் படைத்தார்.

இதன்மூலம் இந்திய ரசிகர்களிடம் இடம் பிடித்தார். அத்துடன இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. இந்த நிலையில் 5 சிக்சர்கள் அடித்ததற்கான ரசிகர்கள் தன்னை ஞாபகம் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தவர் என அறிய விரும்புவதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட வேண்டும்

இது தொடர்பாக ரிங்கி சிங் கூறிதாவது:-

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஜாம்பவான்கள். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமுமே அவர்கள் அடுத்த வருடம் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்றும், கோப்பையை வெல்லும் அணியில் இடம்பெற வேண்டும் என்றும் விரும்புகிறது.

இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு மிக முக்கியமான தருணமாக இருக்கும். ஏனெனில், யாருக்குத் தெரியும், இதுவே அவர்களின் கடைசி உலகக் கோப்பையாக கூட இருக்கலாம். எனவே, அவர்களால் இந்தியாவுக்காக இந்த கோப்பையை வெல்ல முடிந்தால் அது மிகப்பெரிய சாதனையாக அமையும். நீண்ட காலமாக நாம் உலக கோப்பையை வெல்லவில்லை என்பதால், இது அவர்களுக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

நாம் கடைசியாக 2011-ல் தான் கோப்பையை வென்றோம். எனவே, அவர்கள் இருவரும் அணியுடன் இணைந்து அந்த கோப்பையை வெல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

தற்போது, ​​ஒரே ஓவரில் அடித்த அந்த ஐந்து சிக்ஸர்களுக்காகவே மக்கள் என்னை அடையாளம் காண்கிறார்கள். ஆனால், இந்திய அணியின் ஒரு அங்கமாக இருந்து, பேட்டிங் மூலம் பங்களித்து, இந்தியா உலக கோப்பையை வெல்ல உதவ வேண்டும் என்பதே இப்போது என் மனதில் உள்ள முக்கிய எண்ணம். வெறும் ஐந்து சிக்ஸர்களுக்காக மட்டுமல்லாமல், அதற்காகவே மக்கள் என்னை அதிகம் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இவ்வாறு ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com