2வது போட்டியிலும் வெற்றி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.
2வது போட்டியிலும் வெற்றி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
Published on

நேப்பியர்:

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. அடுத்து, நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். அவர் 69 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 33.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 248 ரன்கள் குவித்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. டேவான் கான்வே 90 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளதும்,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com