கடைசி ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார் கிளென் பிலிப்ஸ்: இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து திரில் வெற்றி

முதலில் ஆடிய நியூசிலாந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இலங்கை 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார் கிளென் பிலிப்ஸ்: இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து திரில் வெற்றி
Published on

தம்புலா:

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 19.3 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வில் யங் 30 ரன்னும், ஜோஷ் கிளார்க்சன் 24 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், பதிரனா 3 விக்கெட்டும், துஷாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை போராடிய அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இலங்கை அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து டி20 தொடரை 1-1 சமன் செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com