வீடியோ: இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டி: பெர்குசன் ஹாட்ரிக்கால் நியூசிலாந்து த்ரில் வெற்றி

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவரில் 108 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 5 ரன்னில் வெற்றி பெற்றது.
வீடியோ: இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டி: பெர்குசன் ஹாட்ரிக்கால் நியூசிலாந்து த்ரில் வெற்றி
Published on

தமுல்லா:

இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் தமுல்லாவில் நேற்று இரவு நடைபெற்றது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவரில் 108 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 5 ரன்னில் வெற்றி பெற்றது.

பெர்குசன் ஹாட்ரிக் சாதனைபுரிந்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். முதல் போட்டியில் இலங்கை வென்று இருந்தது. இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com