டி20 உலகக்கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு- இளம் வீரருக்கு வாய்ப்பு

டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
டி20 உலகக்கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு- இளம் வீரருக்கு வாய்ப்பு
Published on

8-வது டி 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இளம் வீரரான மைக்கேல் பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார். 

நியூசிலாந்து அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுத்தி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாச்லன் பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரென்ட் போல்ட், பின் ஆலன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com