2-ஆவது டெஸ்ட் போட்டி: இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 330/8

டாம் பிளண்டல் பொறுப்புடன் ஆடி 185 பந்துகளை எதிர்கொண்டு 80 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
2-ஆவது டெஸ்ட் போட்டி: இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 330/8
Published on: 

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை குவித்துள்ளது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை 5 விக்கெட் இழப்புக்கு 246 என்ற நிலையில் தொடங்கிய நியூசிலாந்து அணி தொடர்ந்து ரன் குவிப்பில் கவனம் செலுத்திய போதிலும், இந்திய அணி இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளைக்கு பிறகு இரு விக்கெட்டுகளை இழந்தது.

மதிய உணவு இடைவேளையின் போது, ​​டாம் பிளண்டல் பொறுப்புடன் ஆடி 185 பந்துகளை எதிர்கொண்டு 80 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பு, ஆகஷ் தீப் பந்துவீச்சில், 19 ரன்கள் எடுத்திருந்த ஜேமிசன் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும், அன்ஷூல் கம்போஜ் 2 விக்கெட்டுகள், குர்னூர் பிரார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

நியூசிலாந்து ரன் குவிப்பு:

முன்னதாக, டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச முடிவு செய்தார். முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி கவனமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது.

முதல் நாள் உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்களை எடுத்திருந்தது. பிறகு முதல் நாளின் 2-ஆவது செஷன் மற்றும் இறுதிக்கட்ட ஓவர்களில் நியூசிலாந்து அணி சீராக ரன் குவிக்க தொடங்கியது.

இதனால் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் டாம் பிளண்டல் 53 ரன்களுடனும், பிலிப்ஸ் 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

X