டெஸ்டில் அதிக விக்கெட்: மெக்ராத்தின் சாதனையை முறியடித்த நாதன் லயன்

இங்கிலாந்து 2-ம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது.ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
டெஸ்டில் அதிக விக்கெட்: மெக்ராத்தின் சாதனையை முறியடித்த நாதன் லயன்
Published on

அடிலெய்டு:

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற

ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய நாதன் லயன் மொத்தம் 564 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தை (563) பின்னுக்குத் தள்ளி நாதன் லயன் 2வது இடம் பிடித்தார்.

ஷேன் வார்னுக்குப் பிறகு டெஸ்ட்டில் அதிக விக்கெட் எடுத்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com