முத்தரப்பு டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 32 பந்தில் 75 ரன்கள் விளாசினார்.
டெவால்ட் ப்ரீவிஸ்
டெவால்ட் ப்ரீவிஸ்
Published on

நமீபியா, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் மோதின.

ஜிம்பாப்வே 144

ஜிம்பாப்வே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. பிரையன் பென்னெட், பென் கர்ரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரையன் பென்னெட் 35 பந்தில் 34 ரன்கள் எடுத்தும், பென் கர்ரன் 12 பந்தில் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த டியோன் மையர் 17 ரன்களும், சிகந்தர் ரசா 10 ரன்களும் எடுத்தனர். விக்கெட் கீப்பர் மருமானி 13 பந்தில் 30 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் யான்சன் 3 விக்கெட்டும், சுப்பராயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

டெவால்ட் ப்ரீவிஸ் அபாரம்

பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியஸ், ஹெர்மான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரிட்டோரியஸ் 22 ரன்களிலும், ஹெர்மான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த டெவால்ட் ப்ரீவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருகு்க தென்ஆப்பிரிக்கா 13.4 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com