நமீபியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: ஹெர்மன் சதத்தால் 348 ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்கா

சிறப்பாக ஆடிய ஜோர்டான் ஹெர்மன் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
hermann
Published on
Summary

நமீபியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜோர்டான் ஹெர்மன் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி 348 ரன்களைக் குவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற நமீபிய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் எண்ணிக்கை 27 ஆக இருக்கும்போது கன்னூர் 10 ரன்னில் அவுட்டானார்.

190 ரன் சேர்த்த ஹெர்மன்-ஜோர்ஜி ஜோடி

அடுத்து ஜோர்டான் ஹெர்மன் உடன் டோனி ஜி ஜோர்ஜி இணைந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

2வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோர்ஜி 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

150 ரன் குவித்த ஹெர்மன்

சிறப்பாக ஆடிய ஹெர்மன் சதமடித்து அசத்தினார். ஹெர்மன் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது.

நமீபியாவின் ரூபன் டிரம்ப்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com