

நமீபியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கானர் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி 335 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்க அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற நமீபிய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கானர் அதிரடியாக ஆடி 119 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு டோனி டி ஜோர்ஜி நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
2-வது விக்கெட்டுக்கு கானர் உடன் இணைந்த டோனி ஜி ஜோர்ஜி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்த ஜோடி 183 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோர்ஜி 79 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நமீபியா சார்பில் ஜேக் பிரேசல் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்குகிறது.