

வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர்கள் கூட்டம் மிர்பூரில் இன்று நடந்தது. அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த வாரியத் தலைவர் தமீம் இக்பால் இந்த தகவலை உறுதிசெய்தார்.
வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்டருமான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2022 செப்டம்பரில் டி20 போட்டியில் இருந்தும், கடந்த 2025 மார்ச்சில் ஒருநாள் போட்டியில் இருந்தும் முஷ்பிகுர் ரஹிம் ஓய்வுபெற்றுவிட்டார்.
இந்நிலையில், வரும் 2027 பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் முஷ்பிகுர் ரஹிம்.
கடந்த 2005 மே மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முஷ்பிகுர் ரஹிம், 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அதே இங்கிலாந்து அணிக்கு எதிராகச் சொந்த மண்ணில் தனது கடைசிப் போட்டியில் விளையாடி விடைபெற உள்ளார்.
முஷ்பிகுர் ரஹிம் 108 டெஸ்ட் போட்டிகளில் 7,062 ரன்களும் (14 சதங்கள்), 274 ஒருநாள் போட்டிகளில் 7,795 ரன்களும் (9 சதங்கள்), 102 டி20 போட்டிகளில் 1,500 ரன்களும் என ஒட்டுமொத்தமாக 16,357 சர்வதேச ரன்களைக் குவித்துள்ளார்.
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர், டெஸ்ட் அரங்கில் வங்கதேசத்தின் அதிகபட்ச ரன் குவிப்பாளர், 3 டெஸ்ட் இரட்டை சதங்களை விளாசிய ஒரே வங்கதேச வீரர் என்ற பெருமை பெற்றவர்.
இவரது தலைமையின்கீழ் வங்கதேச அணி 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் வெற்றியையும், 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியையும் பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது.