தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: காயத்தால் முஷ்பிகுர் ரஹிம் விலகல்

முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
mushfiqur rahim
Published on: 
Summary

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் காயம் காரணமாக விலகியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அனுபவமிக்க பேட்ஸ்மேன் ஆன முஷ்பிகுர் ரஹிம், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என வங்கதேச அணியின் பிசியோதெரபிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகியுள்ளது வங்கதேச அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

X