டெஸ்டில் 7000 ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர்: முஷ்பிகுர் ரஹிம் சாதனை..!

வங்கதேச அணிக்காக அதிக டெஸ்ட் மற்றும் சதம் அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்.
முஷ்பிகுர் ரஹிம்
முஷ்பிகுர் ரஹிம்
Published on: 

வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய கடைசி நாளில், வங்கதேச அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் முஷ்பிகுர் ரஹிம் இந்த மைல்கல்லை எட்டினார்.

7000 ரன்களை கடந்த சாதனை

இந்தச் சாதனையைப் படைக்க அவருக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அந்த ரன்னை எடுத்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் உலக அளவில் இந்த சாதனையைப் படைத்த 59-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம்

கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் தனது டெஸ்ட் பயணத்தைத் தொடங்கிய முஷ்பிகுர், இதுவரை 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 14 சதங்களும், 30 அரைசதங்களும் அடங்கும்.

வங்கதேச அணிக்காக அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மொமினுல் ஹக் 5,293 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தமிம் இக்பால் 5,134 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

வங்கதேச அணிக்காக அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரரும், அதிக சதம் அடித்த வீரரும் இவராவார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் காயம் காரணமாக விளையாடவில்லை. 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 34 ரன்கள் எடுத்த நிலையில், 2-வது இன்னிங்சில் 49 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

X