உலகக் கோப்பை அணியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஆதிக்கம்

சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லை.குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
உலகக் கோப்பை அணியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஆதிக்கம்
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் ஆதிக்கம் உள்ளது.

கேப்டன் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷன், ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய 4 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உலகக் கோப்பை அணியில் உள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2 பேரும் (ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் 2 வீரர்களும் (விராட் கோலி, முகமது சிராஜ்), டெல்லி கேப்பிடல்சில் 2 பேரும் (அக்ஷர் படேல், குல்தீப் யாதவ்), லக்னோ (கே.எல்.ராகுல்), சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜடேஜா) அணிகளில் தலா ஒருவரும் உலகக் கோப்பைக்கு தேர்வாகி உள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com