மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஜெயவர்தனே விலகல்

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பரில் கோவாவில் நடைபெற உள்ளது.
jayawardane
Published on: 
Summary

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மஹிலா ஜெயவர்தனே விலகியுள்ளார் என அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

ஜெயவர்தனே விலகல்

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மஹிலா ஜெயவர்தனே விலகியுள்ளார் என அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதில் 3 கோப்பைகளுக்கு 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஜெயவர்தனே தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.

ஐபிஎல் தொடரில் 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கோப்பையை வெல்ல உதவிய மஹேலா ஜெயவர்தனே, அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். அவர் 2017-2022 வரை மும்பை அணியில் இருந்தார். அதன்பின், கடைசியாக 2025 சீசனில் மீண்டும் மும்பை அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார் ஜெயவர்தனே.

கடந்த ஆண்டில் 9வது இடம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெளிநாட்டு லீக்குகளிலும் இவர்தான் பயிற்சியாளராக இருந்துவந்தார். 2025 சீசனில் குவாலிபயர் 2ல் தோற்றது. கடந்த 2026-ல் ஒன்பதாவது இடத்தில் முடித்தது.

அணியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பரஸ்பர ஒப்புதலுடன் முடிவெடுத்துள்ளோம் என மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.

டிசம்பரில் மினி ஏலம்

ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்கள் குறித்த முடிவுகள் நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பரில் கோவாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com