சையத் முஷ்டாக் அலி கோப்பை: சூர்யகுமார் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை

சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 15 பந்தில் அரை சதம் கடந்தார்.
suryakumar yadav
Published on: 
Summary

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் அதிரடியால் ஐதராபாத் அணியை மும்பை அணி எளிதில் வீழ்த்தியது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்குகிறது.

டாஸ் வென்ற மும்பை

கொல்கத்தாவில் நடந்த போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 172 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அபிரத் ரெட்டி 35 ரன்னும், கொடிமலா ஹிமதேஜா 25 ரன்னும் எடுத்தனர்.

மும்பை அணி சார்பில் மேக்ஸ்வெல் சுவாமிநாதன் 3 விக்கெட்டும், ஷிவம் துபே, சாய்ராஜ் பாட்டீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே மும்பை வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்த நிலையில் ரகுவன்ஷி 27 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஹர்ஹிக் தாமோர் 24 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து, 3வது விக்கெட்டுக்கு முஷீர் கானுடன், சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இந்த ஜோடி கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளுக்கு விளாசியது.

முஷீர் கான் அரை சதம்

3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 23 பந்தில் 65 ரன்கள் குவித்த நிலையில், முஷீர் கான் அரை சதமடித்து 51 ரன்னில் வெளியேறினார்.

15 பந்தில் அரைசதமடித்த சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ் 15 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 21 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், மும்பை அணி 13.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

X