லக்னோவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
லக்னோவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி
Published on: 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து, 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில், பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் நேரில் கண்டு ரசித்து வருகிறார்.

இதன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com