வீடியோ: 100 ஆண்டுகால ஆஷஸ் வரலாற்றில் முதல் முறை.. முதல்நாளில் நடந்த சுவாரஸ்யம்

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது.
வீடியோ: 100 ஆண்டுகால ஆஷஸ் வரலாற்றில் முதல் முறை.. முதல்நாளில் நடந்த சுவாரஸ்யம்
Published on

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 100 ஆண்டுகால ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் முதல் நாள் ஆட்டத்தில் (Eng 10, Aus 9) 19 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக 2001-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் (Eng 10, Aus 7) 17 விக்கெட்டுகள் இழந்தது அதிகபட்சமாக இருந்தது.

மேலும் பெர்த் மைதானத்தில் முதல் நாளில் 19 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் 17 விக்கெட்டுகளை இழந்ததே அதிகபட்சமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com