ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள்: விராட் கோலியை முந்தினார் #SanjuSamson

அரையிறுதிலும், இறுதிப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார்.இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார்.
ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள்: விராட் கோலியை முந்தினார் #SanjuSamson
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 255 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசினார்.

இந்த தொடரில் தொடக்கத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக விராட் கோலி (6 இன்னிங்ஸ்) 319 ரன்கள் அடித்துள்ளார். இஷான் கிஷன் இந்த தொடரில் 9 இன்னிங்சில் 317 ரன்கள் அடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com