ஐபிஎல் 2024: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விலகல்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.
ஐபிஎல் 2024: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விலகல்
Published on

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகி உள்ளார். இடது கணுக்கால் காயம் குணமடையாத காரணத்தால் அவர் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது.

இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com