பிரிந்த மனைவிக்கு மாதாந்திர ஜீவனாம்சம் ரூ. 1.30 லட்சம் வழங்க முகமது ஷமிக்கு கோர்ட் உத்தரவு

சமியின் மனைவி தனக்கும், தனது மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி இந்த ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும்
பிரிந்த மனைவிக்கு மாதாந்திர ஜீவனாம்சம் ரூ. 1.30 லட்சம் வழங்க முகமது ஷமிக்கு கோர்ட் உத்தரவு
Published on

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி முக்கிய பங்கு வகிக்கிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது சமியின் திருமண வாழ்க்கை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.

இந்த புகார்கள் அனைத்திற்கும் சமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முகமது சமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

கடந்த 2020 மற்றும் 2021-ம் நிதியாண்டிற்கான சமியின் வருமான வரி கணக்கின்படி, சமியின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடிக்கு அதிகமாக இருந்ததாகவும், இதன் காரணமாக ஜீவனாம்சமாக மகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.3 லட்சம் என்றும், ஹசின் ஜஹானின் செலவுக்கு ரூ.7 லட்சம் என்றும் மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம் என்று ஹசின் ஜஹானின் வழக்கறிஞர் குடும்ப நல நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, கொல்கத்தா நீத்மன்றம் ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்று ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. அதில், ஜஹானின் தனிப்பட்ட செலவிற்கு என்று ரூ.50 ஆயிரமும், மீதமுள்ள ரூ.80 ஆயிரம் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து, சமியின் வழக்கறிஞர் சலீம் ரஹ்மான் கூறியிருப்பதாவது: சமியின் மனைவி தனக்கும், தனது மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், சமியோ கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனது மகளுக்காக மாதந்தோறும் ரூ.80 ஆயிரம் கொடுத்து வருகிறார். ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு என்று ரூ.7 லட்சம் வேண்டும் என்றும், மகளுக்கு ரூ.3 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார். தற்போது நீமன்றம் ஹசின் ஜஹானுக்கான சொந்த செலவுக்கு ரூ.50 ஆயிரமும், மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் ரூ.80 ஆயிரமும் கொடுக்க உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி இந்த ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com