ஆசிய போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி மகன்: ரஷீத் கானுக்கு இடமில்லை

ரஷீத் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ரஷீத் கான்
ரஷீத் கான்
Published on

ஆசிய போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்படடுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர ஆல்-ரவுண்டரான முகமது நபியின் மகன் ஹசன் ஈசாகிள் இடம் பிடித்துள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இவருக்கு 20 வயதுதான் ஆகிறது. 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈசாகிள் 41 டி20 அணியில் 1,094 ரன்கள் அடித்துள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் சீனியர் அணிக்காக இதுவரை விளையாடியதில்லை.

மகனுடன் முகமது நபி
மகனுடன் முகமது நபி

ஆப்கானிஸ்தான் அணிக்கு தர்விஷ் ரசூலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷித் கான் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்:-

தர்விஷ் ரசூலி (கேப்டன்), முகமது ஈசாக் (விக்கெட் கீப்பர்), முகமது அக்ரம், ஹசன் ஈசாகிள், காலித் தனிவால், இம்ரான் மிர், பைசல் கான் ஷினோசடா, நஜிபுல்லா ஜத்ரன், ஃபார்மனுல்லா சஃபி, இஸ்மாத் அலாம், கரீம் ஜனத், நங்யால் கரோட்டி, அரப் குல் மொமண்ட், ஃபரிதூன் தாவூத்சாய், அப்துல்லா அகமதுசாய்.

இந்திய அணி:-

ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணி:-

சஹிப்சதா பர்ஹான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில், சைம் ஆயுப், அப்ரார் அகமது, உஸ்மான் கான், சுபியன் மொகிம், மாஸ் சதாகத், ஹசன் நவாஸ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com