குசல் பெரேராவுக்கு முதல் ஓவரிலேயே மன்கட் எச்சரிக்கை விடுத்த ஸ்டார்க்- வைரலாகும் வீடியோ

14-வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
குசல் பெரேராவுக்கு முதல் ஓவரிலேயே மன்கட் எச்சரிக்கை விடுத்த ஸ்டார்க்- வைரலாகும் வீடியோ
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தே அவுட் என நடுவரிடம் முறையீடப்பட்டது. ஆனால் நடுவர் அதனை நிராகரித்தார். இதனையடுத்து வீசிய 3-வது பந்தில் குசல் பெரேராவை ஸ்டார்க் மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்றார். இது குறித்து இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டே நகர்ந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக அளவில் மன்கட் செய்யப்படும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com