சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல் ரவுண்டர் விலகல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.அதிரடி ஆல்ரவுண்டர் விலகியது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல் ரவுண்டர் விலகல்
Published on

சிட்னி:

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் முதுகு வலி காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவரது விலகல் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:-

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஸ்சேன், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com