ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையும் மைக் ஹசி

ஒலிம்பிக் மற்றும் டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இணைய இருக்கிறார்.
மைக் ஹசி
மைக் ஹசி
Published on: 

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக் ஹசி. இவர் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார். தற்போதுதான் இந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆலேசகர்

இந்த நிலையில் ஆஸ்திரேலியா தேசிய அணியின் ஆலோசகர் பயிற்சியாளராக (consultant coach) நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஆஷஸ் தொடருக்கும், தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கான அணியிலும் பயிற்சியாளராக பணியாற்றுவார்.

2028 டி20 உலக கோப்பை

அதோடு 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 2028-ல் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கும் அட்வைசராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராகவும் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ல் ஓய்வு

2016-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையின்போது, ஆஸ்திரேலியாவின் பயிற்சிக்குழுவில் பணியாற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51-க்கு மேல் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X