மேஜர் லீக் தொடர்: பூரன் அதிரடி சதத்தால் கோப்பையை கைப்பற்றியது எம்ஐ நியூயார்க்

முதலில் பேட்டிங் செய்த சியாட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் சேர்த்தனர்.எம்.ஐ அணியின் கேப்டன் பூரன் 137 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேஜர் லீக் தொடர்: பூரன் அதிரடி சதத்தால் கோப்பையை கைப்பற்றியது எம்ஐ நியூயார்க்
Published on

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் எம்.ஐ நியூயார்க் அணியும் சியாட்டல் ஆர்கஸ் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த சியாட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர், களமிறங்கிய எம்.ஐ. நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எம்.ஐ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 55 பந்தில் 10 பவுண்டரி 13 சிக்ஸர்கள் என மொத்தம் 137 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் எம்.ஐ அணி மேஜர் லீக் தொடரின் முதல் கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

இந்த தொடர் மூலமாக மொத்தமாக மும்பை அணி 9 முறை சாம்பினாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன், சாம்பியன் லீக் டி20யில் 2 முறை சாம்பியன், மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு முறையும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஒரு முறையும் மும்பை அணி சாம்பினாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com