MLC டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றியது MI நியூயார்க் அணி

MI நியூயார்க் அணியில் அதிகபட்சமாக டீகாக் 77 ரன்கள் அடித்தார் வாஷிங்டன் அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 70 ரன்கள் அடித்தார்
MLC டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றியது MI நியூயார்க் அணி
Published on

MLC டி20 தொடரின் இறுதிப்போட்டியில் MI நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய MI நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டீகாக் 77 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கடைசி ஒவரில் வாஷிங்டன் அணி வெற்றி பெற 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், MI நியூயார்க் பவுலர் ருஷி உகர்கர் அந்த ஓவரில் 1 விக்கெட் எடுத்து 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com