மது அருந்தியதால் மேக்ஸ்வெல்லுக்கு உடல்நல குறைவா?

2012ல் விளையாட துவங்கிய மேக்ஸ்வெல், அனைத்து வடிவத்திலும் சிறப்பாக ஆடினார்ஐசிசி உலக கோப்பை தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்
மது அருந்தியதால் மேக்ஸ்வெல்லுக்கு உடல்நல குறைவா?
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர், 35 வயதான க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell).

2012ல் இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் மேக்ஸ்வெல்.

கடந்த 2023 நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்.

2022ல் கால்முறிவின் காரணமாக 3 மாதங்களுக்கும் மேல் விளையாடாமல் இருந்தார்.

சென்ற வருடம் க்ளென் தொடர்ச்சியாக பல காயங்களை சந்தித்தார். அகமதாபாத் நகரில் கீழே விழுந்ததில் ரத்த கட்டு ஏற்பட்டது.

ஆனாலும், உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இறுதி ரன்களை எடுத்தவர் க்ளென் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தினார். பிறகு முன்னாள் ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் ப்ரெட் லீ நடத்தி வரும் "சிக்ஸ் அண்ட் அவுட்" எனும் இசைக்குழுவின் கச்சேரியை ரசித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் ராயல் அடிலெய்ட் (Royal Adelaide) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அதிக மது அருந்தியதால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என கண்டறிய ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரெலியா (Cricket Australia), இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com