அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர்: பிஞ்ச் சாதனையை முறியடித்த மேக்ஸ்வெல்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.
அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர்: பிஞ்ச் சாதனையை முறியடித்த மேக்ஸ்வெல்
Published on

ஆக்லாந்து:

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரை கைப் பற்றியது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 1 சிக்சர் அடித்தார். இது அவரது 126-வது சிக்சர் ஆகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன் ஆரோன் பிஞ்ச் 125 சிக்சர்கள் அடித்ததே சாதனையாகும். அவரை தற்போது மேக்ஸ்வெல் முந்தியுள்ளார். மற்ற ஆஸ்திரேலிய வீரரர்களில் டேவிட் வார்னர், 113 சிக்சர்களும், வாட்சன் 83 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தில் இருக்கிறார்.

ரோகித் சர்மா 190 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், குப்தில் (நியூசிலாந்து) 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com