சதத்தை நழுவவிட்ட சவுத் ஷகீல்: பாகிஸ்தான், இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் டிரா

பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்தது.
saud shakeel
Published on: 
Summary

பாகிஸ்தான், இலங்கை இடையே ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

பாகிஸ்தான்- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 439 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

5 வீரர்கள் அரைசதம்

சவுத் ஷகீல் 93 ரன்னும், தய்யாப் ஆரிப் 57 ரன்னும், அராபத் மினாஸ் 52 ரன்னும், முகமது தாஹா 51 ரன்னும், பாபர் அசாம் 50 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷனகா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தனஞ்செய டி சில்வா, குசால் மெண்டிஸ் சதம்

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 446 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்செய டி சில்வா 167 ரன்னிலும், கேப்டன் குசால் மெண்டிஸ் 119 ரன்னிலும் அவுட்டாகினர். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 249 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் சார்பில் சாகிப் கான் 7 விக்கெட்டும், மொகமது அப்பாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

12 ரன்கள் பின்தங்கிய பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சவுத் ஷகீல் தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார்.

சதத்தை நழுவவிட்ட சவுத் ஷகீல்

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சவுத் ஷகீல் 97 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில 8 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்த போது போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் பாகிஸ்தான், இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

இலங்கை அணி சார்பில் ரத்னாயகே 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

X