போராடிய செடிகுல்லா அடல், காயிஸ் அகமது: வங்கதேசத்துடனான டெஸ்டை டிரா செய்த ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணியின் செடிகுல்லா அடல் 2வது இன்னிங்சில் சதமடித்தார்.
sediqullah atal
Published on: 
Summary

செடிகுல்லா அடல் சதமடிக்க, காயிஸ் அகமது கடைசி வரை போராட வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியை டிரா செய்தது ஆப்கானிஸ்தான் அணி.

ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 346 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷட்மன் இஸ்லாம், தன்ஜித் ஹசன, லிட்டன் தாஸ் ஆகியோரின் அரை சதம் கடந்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது சலீம் 4 விக்கெட்டும், யாமின் அகமத்சாய் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் 240 ரன்னில் ஆல்அவுட்

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா சதமடித்து 105 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்துல் மாலிக் 62 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் சார்பில் ஹசன் மெஹ்மூத் 5 விக்கெட்டும், எபாடத் ஹொசைன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சதமடித்த லிட்டன் தாஸ்

126 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம் 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 372 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பொறுப்புடன் ஆடிய லிட்டன் தாஸ் சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். ஷாண்டோ 82 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 81 ரன்னும் எடுத்தனர். மெஹிதி ஹசன் மிராஸ் 52 ரன் எடுத்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 479 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கு 479 ரன்

இதையடுத்து, 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. நான்காம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

செடிகுல்லா அடல் சதம்

இந்நிலையில், கடைசி நாளான இன்று ஆப்கானிஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் செடிகுல்லா அடல் சதமடித்து அசத்தினார். அவர் 111 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ரஹ்மத் ஷா ஒத்துழைத்து அரை சதம் கடந்து 51 ரன்னில் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் குவாயிஸ் அகமது பொறுமையுடன் ஆடி ஆட்டத்தை டிராவுக்கு கொண்டு சென்றார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 346 ரன்கள் எடுத்தது. இதையடுத்து வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகன் விருது லிட்டன் தாசுக்கு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com