இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: காயத்தால் விலகிய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்

இரண்டாவது டி20 போட்டியின்போது லாக்கி பெர்குசனுக்கு காயம் ஏற்பட்டது.
ferguson
Published on: 
Summary

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் முன்று டி20 போட்டிகளில் இந்திய அணி வென்று 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நாளை ஆக்லாந்து மைதானத்தில் நடக்கிறது.

பெர்குசன் விலகல்

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இரண்டாவது டி20 போட்டியின்போது லாக்கி பெர்குசனுக்கு காயம் ஏற்பட்டது.

மேட் பிஷர்

அவருக்குப் பதிலாக மேட் பிஷர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றியும் எஞ்சிய டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்.

இருப்பினும், லாக்கி பெர்குசன் அடுத்ததாக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என நியூசிலாந்து அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com