டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம்: தென் ஆப்பிரிக்க வீரர் சாதனை

இந்தப் பட்டியலில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.
lhuan dre pretorius
Published on
Summary

டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதமடித்து சாதனை படைத்துள்ளார் தென் ஆப்பிரிக்காவின் லூவான்-ட்ரி பிரிடோரியஸ்.

நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

நமீபியா-தென் ஆப்பிரிக்கா

நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பு

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பிரிடோரியஸ் 53 பந்தில் சதமடித்து 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் பிரைலிங்க் அதிரடியாக ஆடி 36 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 72 ரன்கள் குவித்தார். லூரன் ஸ்டீன்காம்ப் அரை சதம் கடந்து 66 ரன்னில் ரிடயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

போராடிய நமீபியா

இறுதியில், நமீபியா அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

குறைந்த வயதில் சதமடித்து சாதனை

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க வீரர் லுவான்-ட்ரே பிரிடோரியஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

20 ஆண்டு 161 நாட்கள் ஆன நிலையில் பிரிடோரியஸ் இந்த சாதனையைப் படைத்தார்.

ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா சசாய் 20 ஆண்டு 337 நாட்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். அவர் 21 ஆண்டு 279 நாட்களில் சதமடித்துள்ளார்.

இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி இந்த சாதனையை விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com