

சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த ஸ்மிருதி மந்தனாவின் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் சமன் செய்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் இரு போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி புலவாயோவில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.
கேப்டன் லாரா வோல்வார்ட் அதிரடியாக ஆடி 62 பந்தில் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே மகளிர் அணி 120 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து, 80 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் வெறும் 62 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் குவித்து தனது 18-வது சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார்.
இதன்மூலம் டி20 சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் (18) அடித்த ஸ்மிருதி மந்தனாவின் சாதனையை அவர் சமன் செய்தார்.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 17 சதங்களுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.