லாகூர் டெஸ்டில் முத்துசாமி 6 விக்கெட்- பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378-ல் ஆல்அவுட்

சல்மான் ஆகா 93 ரன்னில் ஆல்அவுட் ஆனார்.ரிஸ்வான் 75 ரன்கள் சேர்த்தார்.
லாகூர் டெஸ்டில் முத்துசாமி 6 விக்கெட்- பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378-ல் ஆல்அவுட்
Published on

மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் சென்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் லாகூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஷபிக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான் மசூத் களம் இறங்கினார். இவர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஷான் மசூத் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பாபர் அசாம் (23), சாத் ஷகீல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 6ஆவது விக்கெட்டுக்கு ரிஸ்வான் உடன் சல்மான் ஆகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் 300 ரன்களை கடந்தது.

இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் பாகிஸ்தான் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்திருந்தது. ரிஸ்வான் 62 ரன்களுடனும், சல்மன் ஆகா 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2ஆவது ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். சல்மான் ஆகா சதத்தை நோக்கி சென்றார். என்றாலும் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கடைநிலை வீரர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் முத்துசாமி சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 80 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com