குருணால் பாண்ட்யாவுக்கு 2-வது ஆண் குழந்தை

குருணால் பாண்ட்யா பன்குரி சர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது.
குருணால் பாண்ட்யாவுக்கு 2-வது ஆண் குழந்தை
Published on

ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குருணால் பாண்ட்யா. இவர் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது மனைவி பன்குரி சர்மாவிற்கு கடந்த 21-ந்தேதி ஆண்குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த குழந்தை மற்றும் தனது மனைவியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, குழந்தையின் பெயர் வயு (Vayu) எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கவிர் (Kavir) என்ற ஆண்டு குழந்தை பிறந்தது. தற்போது அவனுக்கு இரண்டு வயது நிறைவடைய இருக்கும நிலையில், 2-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குருணால் பாண்ட்யா மாடல் அழகியான பன்குரி சர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com