சிஎஸ்கே அணியில் இருந்து கேகேஆர்-ல் இணைந்த பிராவோ

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.பிராவோ சிஎஸ்கே அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டவர்.
சிஎஸ்கே அணியில் இருந்து கேகேஆர்-ல் இணைந்த பிராவோ
Published on

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர் ஆகியோரை நியமித்து வருகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com