உலக கோப்பை 2023 - விராட் கோலி, சுப்மன் கில் அரை சதம் அடித்து அசத்தல்

டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்துள்ளது.ஆட்டத்தின் முதல் ஓவரில் ரோகித் சர்மா 4 ரன்னில் அவுட்டானார்.
உலக கோப்பை 2023 - விராட் கோலி, சுப்மன் கில் அரை சதம் அடித்து அசத்தல்
Published on

மும்பை:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மகாராஷ்டிராவின் வான்கடே மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய விராட் கோலி, சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

இந்திய அணி 22 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com