ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்

ராம நவமியால் ஐபிஎல் தொடரின் 2 போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்
Published on

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்கள் முறையே கொல்கத்தா, சென்னை, குஜாராத் ஆகிய அணிகள் உள்ளன.

இந்த நிலையில் ராம நவமியால் ஐபிஎல் தொடரின் 2 போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் நவமியை முன்னிட்டு, ஏப்ரல் 17-ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த கொல்கத்தா- ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 16-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ஏப்ரல் 16-ந் தேதியன்று நடைபெறவிருந்த குஜராத்- டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 17-ந் தேதி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com