'ஜெய் ஸ்ரீ ஹனுமான்' - இன்ஸ்டாவில் பதிவிட்ட கேசவ் மகாராஜ்

சென்னையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.
'ஜெய் ஸ்ரீ ஹனுமான்' - இன்ஸ்டாவில் பதிவிட்ட கேசவ் மகாராஜ்
Published on

சென்னை:

உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டி நேற்று நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 46.4 ஓவரில் 270 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷகீல், பாபர் அசாம் ஆகியோர் அரை சதமடித்தனர்.

தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து போராடி வென்றது. மார்க்ரம் 91 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின், பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் `ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என பதிவிட்டார். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com